Saturday, August 21, 2010

ASP.net முதல் அப்ளிகேசன் மற்றும் ஃப்ரேம்வொர்க்

--டாட்நெட் ஃப்ரேம்வொர்க் என்பது டாட்நெட்டில் நாம் உருவாக்கும் அப்ளிகேசன்களுக்கு ஒரு அடித்தளம்.

--இது பல கனிப்பொறி மொழிகளை(Computer languages) அனுமதிக்கும்.

--இது இரண்டு மொழிகளை இணைத்து அப்ளிக்கேசன் டெவலப் செய்யும் வசதி கொண்டது Common Type System (CTS) (உ: C# & VB)

--இதில் CLR என சொல்லக்கூடிய Common Language Runtime உள்ளது. இதன் வேலை அப்ளிகேசன் அவுட்புட்டை நிர்வாகம் செய்வது. இதன் மூலமே நமது அப்ளிகேசன்கள் செயல் படுகின்றன.

--CLR ஐ அடுத்து இந்த ஃப்ரெம்வொர்க்கில் முக்கிய பங்கு வகிப்பது FCL(Framework Class Library). இதுதான் நாம் அப்ளிகேசன்கள் உருவாக்கத் தேவையான Classes, Namespaces, XML support, I/O operations, SOAP மற்றும் database உடன் தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த ஃப்ரேம்வொர்க் குறித்து இந்த சிறிய முன்னுரையுடன் முடித்துக் கொண்டு நேரடியாக நாம் செல்லப் போவது ASP.net எனப் படும் இணைய அப்ளிகேசனுக்கு(Web Application).

இந்த டாட்நெட் அப்ளிகேசன்களை உருவாக்க நாம் உபயோகிக்க போகும் மென்பொருள் Visual Studio2005 மற்றும் அதற்கு மேலான வெர்சன்கள்.அதாவது ஃப்ரேம்வொர்க்2.0 மற்றும் அதற்கு மேல். இதை உங்கள் கனினியில் உள்ளீடு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

டாட்நெட் வெப் அப்ளிகேசன் உருவாக்குவதில் இரண்டு வகைகள் இருக்கின்றன.

அவை

1) Client Side Code என சொல்லக் கூடிய டிசைன் தொடர்பானது.(HTML, Javascript)
2) Code behind என சொல்லக் கூடிய சர்வருடன் தொடர்பு கொள்ளும் மொழி.(c#, VB etc)

இந்த Code behind பகுதியில் உபயோகப் படுத்தப்படும் மொழிகளில் பெரும்பான்மையானவை c# மற்றும் VB . அதனால் இந்த இரண்டு மொழிகளையும் நம்முடைய அனைத்து வகுப்புகளிலும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ள போகிறோம்.

இன்றைய வகுப்பில் விஷீவல் ஸ்டூடியோவில் எப்படி அப்ளிகேசன் புதிதாக உருவாக்குவது என்பதை பார்க்கலாம்.

1) உங்கள் கனினியில் விஷீவல் ஸ்டூடியோவை திறக்கவும்.


இதை நீங்கள் Start -> All Programs -> Micrososft Visual Studio 2005 -> Micrososft Visual Studio 2005  மூலம் திறக்கலாம் அல்லது Run சென்று devenv என டைப் செய்தும் திறக்கலாம்.


2) அதன் பின் File -> New -> Website என்பதை பயன் படுத்ஹ்டியோ அல்லது கீழே உள்ள படத்தில் வருவது போல் Create -> Web Site என்பதியோ உபயோகப் படுத்தி திறக்கலாம்.





3) பின்னர் ASp.net Website என்பதை தெரிவு செய்து கொண்டு நீங்கள் பயன் படுத்த போகும் Code behind மொழியையும் அங்கு தேர்வு செய்யவும்.





உங்கள் அப்ளிகேசனின் பெயரை கொடுத்து OK பட்டனை அழுத்தவும்.


4) இப்போது திறந்திருக்கும் அப்ளிகேசனில் Default.aspx  மற்றும் Default.aspx.cs (அல்லது Default.aspx.vb. இது நீங்கள் தேர்வு செய்யும் மொழியைப் பொருத்தது) என்ற இரு ஃபைல்கள் இருக்கும். Default.aspx  என்பது டிசைன் தொடர்பான பகுதி. Default.aspx.cs என்பது நாம் சொன்ன Code behind பகுதி.


5) Default.aspx ல் "My First Application" என டிவ் நடுவில் டைப் செய்யவும். கீழே உள்ள படத்தை பார்க்க.




6) Default.aspx மீது right click செய்து set as start page கொடுக்கவும். இது எதற்காக என்றால் நமது அப்ளிகேசன் ஒன்றுக்கு மேற்பட்ட பேஜ் கொண்டதாக இருக்கும் படசத்தில் எது முதன்மையான பேஜ் என நிர்ணயம் செய்வதற்கு.





7) இப்போது Debug -> Start Debuging (or) Start Without Debuging தேர்வு செய்தோ அல்லது பச்சை நிற ரன் பட்டனை அழுத்தியோ ரன் செய்யலாம்.






அல்லது






6) வெப் அப்ளிகேசன் பொருத்த வரை அதன் இயக்கம் Web.config என்ற ஃபைல் மூலம் நிர்ணயிக்கப் படும். இதை நாம் முன்னரே இணைப்பதானாலும் இணைத்து கொள்ளலாம். அல்லது நாம் ரன் செய்யும் வேலையில் ஒரு பாப்-அப் கேட்கும். அதன் மூலமும் இணைக்கலாம்.








இதில் தேர்வு செய்து OK கொடுத்தால் உங்கள் அப்ளிகேசன் ரன் ஆகத் தொடங்கி விடும்.


7) உங்களுடைய அவுட்புட் கீழ் உள்ளவாறு இருக்கும்.








அடுத்த வகுப்பில் இந்த Web.Config என்ற ஃபலின் பயன்பாடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். இது டாட்நெட் வகுப்புகளில் மிகவும் முக்கியமானது.

தமிழில் டாட்நெட் பயில வாருங்கள்


நீங்கள் கல்லூரி மாணவரா? 
அல்லது 
ஐ.டி துறையில் வேலைதேடும் நபரா? 
நீங்கள் தமிழரா? 

அப்படியெனில் எங்களால் ஆர்ம்பிக்கப்படும் இந்த வலைப்பூ முற்றிலும் உங்களுக்கானது. நீங்கள் இங்கு வந்து பயிலலாம், உங்கள் சந்தேகங்களை கருத்துரை மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ கேட்கலாம்.

நீங்கள் டாட் நெட்டில் பணிபுரிபவராக இருப்பின் இங்கு தவறாக பதிவிடப்பட்டால் சுட்டிக் காட்டலாம். ஒரு வேலை இங்கு சொல்லப்படும் பகுதிகளுக்கு மாற்று வகைத் தீர்வுகள் உங்களிடம் இருப்பின் அதையும் பகிரலாம். 

நாங்கள் இதை துவக்கப் பாடத்திலிருந்து பாடமாக நாளை(22-Aug-2010) முதல் தொடங்குகிறோம். ஒரு வேலை உங்களுக்கு பாடமல்லாது புரோகிராம்களில் சந்தேகமிருப்பின் மின்னஞ்சல் செய்யுங்கள். அதற்கான விடை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப் படுவதுடன் இங்கும் பதிவிடப் படும்.

இது முழுக்க முழுக்க நமது டாட்நெட் சார்ந்த கல்வியினை பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப் படுகின்றது. விருப்பமுள்ள அனைவரும் இணைந்து கொள்ளுங்கள்.

எங்கள் மின்னஞ்சல்: